சமீபத்தில் படித்து ரசித்தது:
அம்பி: மிஸ்டர் கங்குலி, அம்பயர் அவுட்னுடாரோ இல்லியோ, அப்புறம் ஏன் சத்தம் போட்டுன்டு இருக்கேள்? இது சட்டப்படி தப்பாக்கும்.
கங்குலி: டேய் குடுமி! நா யாருனு தெரியுமா? பெங்கால் டைகர்(Bengal Tiger). அப்டி தான் கத்துவேன்.
அம்பி: கென்யா, பங்ளாதேஷ் கூட எல்லாம் சென்சுரி அடிக்கறேளே, ஆனா அஸ்த்திரேலியா, பாகிஸ்தான்-னா மட்டும் ஒன் பாத்ரூம் போறேளே, ஏன்?
கங்குலி: நான் தாதா-டா! தேவையானப்ப மட்டும் ஆடுவேன்.
அம்பி: கேப்டன் கங்குலி, மத்த டீம் கேப்டன்லாம் (பான்டிங், ஸ்மித், இன்ஸி) செஞ்சுரி அடிச்சு அவா டீமை ஜெயிக்க வைக்கரா, ஆனா நீங்க மட்டும் ஆடவே மாட்டேன்றேளே?
கங்குலி: டேய் குடுமி! அதான் சச்சின், சேவாக், டிராவிட் எல்லாம் செஞ்சுரி அடிக்கரானுங்கல்ல, அப்புறம் நான் எதுக்குடா அடிக்கனும்?
அம்பி: அலட்சியமா பேசாதேள் கங்குலி. அடுத்தவா டேலண்ட்ல புகழ் தேட்ரது தப்பு!
கங்குலி: போடா குடுமி! எனக்கே அட்வைஸ் பண்றியா? #$^%$##$%(அர்சனை தொடர்கிறது)...
அன்னியன்: டேய் பாடு (BAADU).
கங்குலி: யாருங்க நீங்க? கில்லஸ்பி மாதிரி ஹேர் ஸ்டைல் வச்சிருக்கீங்க??
அன்னியன்: நான் அவன் இல்லடா, எமன். ஏன்டா ரன் அடிக்கவே மாட்டேங்கிர?
கங்குலி: பேட்டிங் பார்ம் அப்பப்ப வந்துட்டு போகும். இதெல்லாம் கிரிக்கெட்ல சகஜம்ங்க.
அன்னியன்: இப்டி சொல்லி தப்பிச்சிகலாம்னு பாக்குரியா!!!!!!
அன்னியன்: 5 ரன் எடுத்தா தப்பா?
கங்குலி: ஒன்னும் தப்பு இல்லீங்க.
அன்னியன்: 5 மேட்ச்சுல 5 ரன் எடுத்தா தப்பா?
கங்குலி: தப்பு மாதிரி தாங்க தெரியுது.
அன்னியன்: 5 வருஷமா 55 மேட்ச்சுல 5 ரன் எடுத்தா தப்பா?
கங்குலி: பெரிய தப்பு தாங்க.
அன்னியன்: கம்மனாட்டி! அதத்தான்டா ஒவ்வொரு மட்ச்சுலயும் நீ பண்னிக்கிடு இருக்கே!
அன்னியன்: இது மாதிரி சொந்த லாபதுக்காக டீமை தோக்கடிக்கரவனுக்கு, நரகத்துல குடுக்கர தண்டனை 'பால்(Ball)பாகம்'.உன்னை ஸ்டெம்ப்பா நிக்க வச்சி, அக்தர், லீ, மெக்ராத் எல்லாரும் பவுலிங் ப்ராக்டீஸ் பன்னபோறாங்க!!!!!!!
நன்றி - ராம்பிரசாத்