October 13, 2005

நெஞ்சில் நிறைந்த ஆலையம்


சில நாட்களுக்கு முன் நண்பருடன் அருகில் உள்ள ஹான்ஸ்வில்(Hanceville, Alabama) என்ற இடத்திற்கு சென்றிருந்தேன். அங்கே உள்ள கிருஸ்த்தவ ஆலையத்திற்கு சென்றிருந்தோம். அந்த ஆலையம் "Shrine of most blessed sacrament" என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. அங்கே எடுத்த புகைப்படம் தான் மேலே உள்ளது.
அங்கே இருந்த ஒருமணி நேரமும் மனதில் ஒரு இனம்புரியாத பரவச உணர்வு உண்டானது. இதே போன்ற உணர்வை சபரிமலை சாஸ்த்தாவின் சன்னதியில் உணர்ந்திருக்கிறேன். இதனால் மக்களுக்கு இந்த ஆள்தோட்டபூபதி சொல்லிகறது என்னன்னா, மனிதனுக்கு மேலே உள்ள சக்தியானது மனிதன் உருவாக்கிய மதம் என்ற மாயைக்கும் அப்பாற்பட்டது!

October 11, 2005

ஒரு காலை இளவெய்யில் நேரம்

ஒரு காலை இளவெய்யில் நேரம், அழகான இலையுதிர்காலம். தூக்கம் கலைந்து எழுந்தால் நண்பர்கள் அனைவரும் கராத்தே கிளாஸ்க்கு கிளம்பிக் கொண்டிருந்தனர். அடித்துப் பிடித்து ஒருவழியாக நானும் கிளம்பி mazda miata mx5 -ஐ விரட்டு விரட்டென விரட்டி கிளாஸ் நடக்கும் மைதானத்தை அடைந்தேன். அன்றைய வகுப்பு, countings கற்றுக்கொள்வது ( ஜப்பான், சீனா, தாய்வானீஸ் போன்ற மொழிகளில் countings கற்றுத்தருவது கராத்தே கலையில் ஒரு பகுதி).

வரிசையில் நின்று கொண்டிருந்த நான், அருகில் எங்காவது எதாவது தெரிந்த முகம் தென்படுகிறதா என நோட்டம் விட்டேன். சற்று தொலைவில் ஒரு முரட்டு ஆசாமி நின்று கொண்டிருந்தான். எங்கோ பார்த்தது போல் இருந்த அவன் யாரென யோசித்தவாரே அவனை உற்று பார்த்துக் கொண்டு இருந்தேன். அட இவன் தானே Enter the dragon படத்தில் ப்ரூஸ் லீ-யுடன் மோதும் வில்லன்களிள் ஒருவன்(பார்க்க படம்) என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே அவன் என்னை பார்த்து விட்டான். அவன் முறைத்த முறைப்பில் பயந்த நான், "ஏன்டா காசு கொடுத்து வந்து அடி வாங்க வேண்டும்?" என்று கிளாஸுக்கு சேர்ந்த என் முடிவை நொந்துக் கொண்டு, "எவன் கையிலே அடி வாங்கினா சங்குதான்!" என முடிவுகட்டி, மாஸ்டரிடம் தலை சுத்துது என பொய் சொல்லிவிட்டு கிளாஸிலிருந்து ஜூட் விட்டேன்.

வீட்டுக்கு வந்ததும் bloglines.com சென்று பிற வலைபதிவுகளை மேய்ந்து பின்னூட்டம் இட்டு விட்டு பசிக்கு எதாவது சாப்பிடலாம் என fridge-ஐ திறந்தேன். அப்போது தான் அந்த சத்தம் கேட்டது. 30-40 பேர் கூடி கோஷங்கள் போடுவது போன்ற சத்தம். அமெரிக்காவில் கோஷமா என வாசலைத் திறந்து பார்த்தால், கூட்டமே என் வீட்டு முன்னால் தான் நின்று கொண்டிருந்தது. சேலை கட்டிய பெண்கள் கையில் துடைப்பம், செருப்பு, சப்பாத்தி கட்டை, அறிவாள் போன்ற தமிழ் ஆயுதங்களுடன் அனல் கக்கும் உஷ்ணப்பார்வை வீசினர். ஆகா! இவுங்களை எங்கியோ பாத்த மாரி இருக்குதே என நினைத்த போது தான் நினைவு வந்தது இவர்கள் தமிழ் பாதுகாப்பு (ஆப்பு இல்லை காப்பு) சங்கம் என்று.

இவங்க எதுக்கு நம்ம வீடு முன்னாடி போராட்டம் பண்றாங்க என்று யோசிக்கும் போதே மொத்தக் கூட்டமும் கோஷம் போடத் துவங்கியது.
"தமிலை கொள்ளாதே!"
"Blog எலுதுவதை நிருத்து"
என கோஷங்கள் வர ஆரம்பித்தது...... இதற்கும் மேல் இதை தொடர அனுமதிக்கக் கூடாதென கனவை களைத்து தூக்கத்தை விடுத்து எழுந்தேன். நாலு பதிவு போட்ட எனக்கே இந்த கனவு என்றால், மற்றவர்களின் நிலை என்ன என்று வியந்து கொண்டே மெரினா ரடியோவை ஆன் செய்து இனிய பாடலை தவழ விட்டேன். "ஒரு மாலை இளவெய்யில் நேரம், அழகான இலையுதிர்காலம்" என சூர்யா கஜினியாக லவ்விக் கொண்டிருந்தார்... சட்டென குளித்து முடித்து கனவில் கண்ட mazda mx5-ஐ நினைத்துக் கொண்டே யுனிவெர்சிட்டியை நோக்கி நடையை கட்டினேன்...