October 13, 2005

நெஞ்சில் நிறைந்த ஆலையம்


சில நாட்களுக்கு முன் நண்பருடன் அருகில் உள்ள ஹான்ஸ்வில்(Hanceville, Alabama) என்ற இடத்திற்கு சென்றிருந்தேன். அங்கே உள்ள கிருஸ்த்தவ ஆலையத்திற்கு சென்றிருந்தோம். அந்த ஆலையம் "Shrine of most blessed sacrament" என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. அங்கே எடுத்த புகைப்படம் தான் மேலே உள்ளது.
அங்கே இருந்த ஒருமணி நேரமும் மனதில் ஒரு இனம்புரியாத பரவச உணர்வு உண்டானது. இதே போன்ற உணர்வை சபரிமலை சாஸ்த்தாவின் சன்னதியில் உணர்ந்திருக்கிறேன். இதனால் மக்களுக்கு இந்த ஆள்தோட்டபூபதி சொல்லிகறது என்னன்னா, மனிதனுக்கு மேலே உள்ள சக்தியானது மனிதன் உருவாக்கிய மதம் என்ற மாயைக்கும் அப்பாற்பட்டது!

15 comments:

Anonymous said...

Nice Shot !

Anonymous said...

looks surreal. great capture.

Anonymous said...

ஆனந்த் மற்றும் பாலாஜி, மிக்க நன்றி

Anonymous said...

//மனிதனுக்கு மேலே உள்ள சக்தியானது மனிதன் உருவாக்கிய மதம் என்ற மாயைக்கும் அப்பாற்பட்டது//

"மதம்" என்ற வார்த்தையே ஒரு மாயைதான். மதத்தின் நோக்கம் சரியான வழியை (மார்க்கத்தை)க் காட்டுவதாக இருக்க வேண்டும். எந்த ஒரு மத நம்பிக்கையாளனின் செயலும் அடுத்தவனுக்கு துன்பம் கொடுத்தால் அவனுக்கு
(துன்பம் கொடுப்பவனுக்கு) மதம் பிடித்திருக்கிறது என்று கொண்டால் மதத்திற்கும் மார்க்கத்திற்கும் உள்ள வித்தியாசம் அறியலாம்.

மற்றபடி நீங்கள் இட்டுள்ள புகைப்படம் தத்ரூபமாக இருக்கிறது. நிசப்தத்தின் Longview என்று கூடச் சொல்லலாம்.

சுட்டதா? சுடப்பட்டதா? :-)

Anonymous said...

அய்யா நல்லடியாரே கஷ்டப்பட்டு தரையில் படுத்து புரண்டு, அந்த வழியே போவோரெல்லாம் என்னை ஒருமாதிரியாக பார்க்கையில் நண்பனிடமிருந்து கடன் வாங்கிய காமிராவில் சுட்டுத்தள்ளியது!

Anonymous said...

ஆள்தோட்டபூபதி !!!
என் வலைப்பதிவுக்கு வந்து பின்னூட்டியதற்கு நன்றி. இது நல்ல கருத்து. கூடவே சபரி மலை சாஸ்தா கோவில் படத்தையும் வெளியிட்டிருந்தீர்களானால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் :-)

Anonymous said...

அய்யா போ(கரெக்டா?).கணேஷ், இந்தியா செல்லும் போது கண்டிப்பாக செய்கிறேன்.

Anonymous said...

nice..

Anonymous said...

நன்றி இராமனாதன் ^^(தமிழில் அண்ட்) அருண்!

Anonymous said...

Xclent Photography Mr A.T.Boopathy !

Anonymous said...

நல்ல புகைப்படம். நல்ல கருத்து.

உங்கள் அனுபவம் போலவே எனக்கும் நடந்திருக்கிறது. வாடிகன் சர்ச்சில் ஒரே கூட்டம். கசகசப்பு வேறு. நம்மூர் பழநி திருப்பதி போலக் கூட்டமுன்னு வெச்சுக்கோங்களேன். அப்படியே வேடிக்கை பாத்துக்கிட்டு திரும்புனா, மேரியம்மா மடியில ஏசுவைப் போட்டுக்கிட்டிருக்குறாப்புல ஒரு செல. பாத்ததுமே ஒரு மாதிரியான பாசமும் பக்தியும் கலந்த உணர்வு உண்டானது. அன்னைக்குப் பாத்ததுதான். அப்புறமா மனசுல அந்த சிலையப் பத்தி அது அப்படி ஏன் இருக்குன்னு யோசிச்சாலும் கொஞ்சம் ஜில்ல்ல்தான்.

Anonymous said...

அன்பு நண்பர் தீலிப்

இந்த புகைப் படம் அருமை!
தங்களது மின் அஞ்சல் தரமுடியுமா?
தங்களை அலபாமாவில் சந்திக்க முயற்சி செய்கிறேன்.

நன்றி
மயிலாடுதுறை சிவா...
mpsiva23@yahoo.com

Anonymous said...

நன்றி வீ.எம், இராகவன், மற்றும் சிவா எனது மின்னஞ்சல் முகவரி saydilip(at)yahoo(dot)com

Anonymous said...

poto ஸோக்கா இருக்கு க்ண்ணா...! ஒலுங்கா படிச்சு நல்ல பையனா இருப்பா...albama vula இருக்குற nite club, strip culb poto ellaam potta engalukku iru inspiration aa irukkumla

Anonymous said...

நயினா JP(யாருப்பா நீ?), நைசா என் ப்ளாக்கை club review site-ஆ மாத்தப் பாக்கரியே, இது உனக்கே நல்லா இருக்கா?