"ஒரு பட்ஜெட் நல்ல பட்ஜெட்டா இல்லையா என்று தெரிந்துகொள்ள சுருக்கமான வழி என்ன தெரியுமா? பட்ஜெட் தினத்தன்று மும்பை பங்குசந்தைக் குறியீடான சென்செக்ஸைப் பாருங்கள். பட்ஜெட் வெளியாகிக் கொண்டிருக்கும்போதே பங்கு வர்த்தக குறியீடு எனப்படும் Ôசென்செக்ஸ்Õ தனது நர்த்தனத்தை துவங்கிவிடும். அவ்வளவு துரிதம்!
பட்ஜெட்டில் வழங்கப்படும் சலுகைகள் மற்றும் வரிகளுக்கு ஏற்றவாறு உடனுக்குடன் தனது ரியாக்ஷனை காட்டிவிடும் பங்குசந்தை! பல வருடங்கள் அனுபவம் பெற்றவர்களும் பொருளாதார வல்லுனர்களும் இத்துறையில் ஈடுபட்டிருப்பதால், நிதி அமைச்சர்கள் கூட, பட்ஜெட்டுக்குப் பின் சென்செக்ஸ் என்ன ஆனது என்றுதான் முதலில் கவனிப்பார்கள்.
சென்செக்ஸை, பட்ஜெட்டின் தாக்கத்தை எதிரொலிக்கும் ஒரு கண்ணாடி என்றால் மிகையல்ல. பட்ஜெட்டைப் பற்றி, நாடு முழுவதுமுள்ள முதலீட்டாளர்களின் ஒருமித்த கருத்தே சென்செக்ஸ. இந்த பட்ஜெட் சமர்ப்பிக்கப் படுவதற்கு முன் சென்செக்ஸ் 6569.72 என்ற அளவில் இருந்தது. பட்ஜெட்டின் முடிவில் 6713.86 புள்ளிகள் என்று, மீண்டுமொரு புதிய உச்சத்தை தொட்டது. ஒரே நாளில் 144.14 புள்ளிகள் ஏறி, மொத்த பங்கு மார்க்கெட்டும் ப.சிதம்பரத்தின் பட்ஜெட்டை பாசத்துடன் வரவேற்றது. இத்தனைக்கும், பங்கு வர்த்தக வரியை (Securities Transaction Tax-STT) சிறிதளவு உயர்த்தியும் இருக்கிறார் ப.சி. கடந்த நான்காண்டுகளில் சென்சஸ் புள்ளிகள் இப்படி உயர்ந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது..."
No comments:
Post a Comment