June 25, 2005

தலைவா, ஏதேனும் திட்டம் இருக்கா?

"சந்திரமுகியின் விமர்சனத்துடன் உங்களை சந்திக்கிறேன்" என்று கூறி விடை பெற்ற ஆள்தோட்ட பூபதி மின்பொறியியல் ஆராய்ச்சி கடலில் விழுந்து கல்வி அலைகளால் இவ்வளைதளத்திள் இருந்து வெகு தூரம் அடித்துச் செல்லப்பட்டான்.

தலைவர் பாட்சா படத்தில் சொன்னது போல், ஜப்பான் நாட்டவர் வேலை செய்யாவிட்டால் இறந்து போய்விடுவர், ஆங்கில நாட்டவர் தன்னை பெருமையாயை கருதாவிடில் இறந்து போய்விடுவர், தமிழர் பேசாவிடில் இறந்து போய்விடுவர். அது போல் என் போன்ற வெளிநாட்டு வாழ் தமிழர், தமிழ் படங்களை காணாவிடின் இறந்து போய்விடுவர்.

எனவே, இந்த ஆள்தோட்ட பூபதி, தனது வாழ்க்கையை தக்கவைத்துக் கொள்ள மீண்டும் அட்லாண்டா செல்கிறான், இந்தியாவை திருத்த முயளும் அன்னியனை காண.

சந்திரமுகியின் பல்வேறு விமர்சனங்களும், அப்படத்தின் வசூல் சாதனையுமே போதும், விமர்சனம் வேண்டாம் என நொண்டிச் சாக்கு சொல்கிறான் பூபதி.

விகடன் இதழில் தலைவரிடம் கெட்கபட்ட கேள்வியும், அதன் பதிலும் இதோ:

கேள்வி: ÔÔதன் படங்கள் மூலமா தமிழ்நாட்டுக்கு ரஜினி தந்தது ஏராளமான Ôசந்தோஷம்Õ. ரஜினிக்குத் தமிழ் மக்கள் திருப்பிக் கொடுத்தது அளவில்லாத அன்பு! யோசிச்சுப் பார்த்தால், இது உணர்வுரீதியான பந்தம். இதைத் தாண்டி உங்களை நேசிக்கிற தமிழ் மக்களின் நலனுக்கு ஆக்கப்பூர்வமா ஏதாவது செய்யணும்னு எப்போவாவது யோசிச்சது உண்டா? அப்படி ஏதாவது ஒரு திட்டம் இப்போ உங்க மனசில் இருக்கா?

பதில்:ஓரிரு விநாடிகள் தீர்க்கமான மௌனம் காக்கிற ரஜினி, நம் கண்கள் பார்த்து அழுத்தமாகச் சொல்கிறார்...
‘‘இருக்கு!”


பி.கு: கல்விப் பளுவின் காரணமாக பூபதி, பூ'பேதி' ஆகி திண்டாடுவதால் அவரது தமிழ் படுகொலை பணிகளுக்கு சிறிது நாட்கள் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. ஆகவே தமிழ் ஆர்வலர்கள் சற்றே இளைப்பாறிக்கொள்ளவும்.

No comments: