July 25, 2005

சின்ன சின்ன மழைத்துளிகள்

அலபாமா வெய்யில் தாளாமல் மழைக்கு ஏங்கிய போது வைரமுத்துவின் வைர வரிகள் மழைவென பொழிய கற்பனையில் குளிர்ந்தேன்.

இடம்: அலபாமா
படம்: என்சுவாசக்காற்றே
பாடல்: சின்ன சின்ன மழைத்துளிகள்
இசை: ரகுமான்
பாடலாசிரியர்: வைரமுத்து

க்ளங்க்ளங் க்ளங்க்ளங்
ஒரு துளி விழுது ஒரு துளி விழுது
க்ளங்க்ளங் க்ளங்க்ளங்
ஒரு துளி விழுது ஒரு துளி விழுது
ஒரு துளி இரு துளி
சில துளி பல துளி
படபட தடதட சடசடவென சிதருது


சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்து வைப்பேனோ
சின்ன சின்ன மழைத்துளிகள் சேர்த்து வைப்பேனோ
மின்னல் ஒளியில் நூலெடுத்து கோர்த்து வைப்பேனோ
சக்கரவாகமோ மழையை அருந்துமாம் - நான்
சக்கரவாகப் பறவையாவேனோ!
மழையின் தாரைகள் வைர விழுதுகள்
விழுது பிடித்து விண்ணில் சேர்வேனோ

(சின்ன சின்ன)

சிறு பூவினிலே விழுந்தால் ஒரு தேன்துளியாய் வருவாய்
சிறு சிப்பியிலே விழுந்தால் ஒரு முத்தெனெவே முதிர்வாய்
பயிர் வேரினிலே விழுந்தால் நவதானியமாய் விளைவாய்
என் கண்விழிக்குள் விழுந்ததனால் கவிதையாக மலர்ந்தாய்
அந்த இயற்கையன்னை படைத்த ஒரு பெரிய ஷவரிது
அட இந்த வயது கழிந்தால் பிறகெங்கு நனைவது
இவள் கன்னியென்பதை இந்த மழை கண்டறிந்து சொல்லியது

(சக்கரவாகமோ)

மழை கவிதை கொண்டு வருது யாரும் கதவடைக்க வேண்டாம்
ஒரு கருப்பு கொடி காட்டி யாரும் குடை பிடிக்க வேண்டாம்
இது தேவதையின் பரிசு யாரும் திரும்பிக் கொள்ள வேண்டாம்
நெடுஞ்சாலையிலே நனைய ஒருவர் சம்மதமும் வேண்டாம்
அந்த மேகம் சுரந்த பாலில் ஏன் நனைய மறுக்கிறாய்
நீ வாழவந்த வாழ்வில் ஒரு பகுதி இழக்கிறாய்
நீ கண்கள் மூடி கரையும்போது மண்ணில் எய்துவாய்

(சக்கரவாகமோ)

(சின்ன சின்ன)

July 24, 2005

கற்றதும் பெற்றதும் - இந்த வார உலகம்


கற்றது: சில சமயங்களில் சும்மா இருப்பதே மேல் (வாய வுட்டு மட்டிக்காதே)

பார்த்தது: "The Island" என்னும் புதிய திரைப்படம். 21ஆம் நூற்றாண்டின் முடிவில் மொத்த உலகமும் அழிந்துவிட, எஞ்சியவர்கள் ஓரிடத்தில் காக்கப்படுகிறார்கள். அவர்களுள் இருக்கும் நாயகனும் நாயகியும் எதோச்சயாக சில விஷயங்களை கிளர, அதன் பின் நடக்கும் திடுக்கிடும் சம்பவங்களே கதை. கிராபிக்ஸ் மிகவும் பிரமாதம். ஒரு முறை காணலாம்.

வெறுத்தது: இன்று காலை நடந்த பார்முலா 1 பந்தயம். Ferrari ரசிகனான எனக்கு, இன்றைய முடிவுகள் மிகுந்த ஏமாற்றம் அளித்தது (இரண்டாம் இடம் பெறுவார் சூமாக்கர் என நினைத்தால், ஐந்தாவது இடமே மிஞ்சியது).

ரசித்தது: ரகுமான் இசையமைத்த "அ-ஆ" படப்பாடல்கள். முக்கியமாக "அன்பே ஆருயிரே", "மயிலிரகே" மற்றும் "மரங்கொத்தியே" பாடல்கள் மிகவும் அருமை.

ருசித்தது: நண்பருடன் சமைத்து உண்ட "Aaluu" பரோட்டா.

July 13, 2005

அன்னியன் - கங்குலி சந்திப்பு

சமீபத்தில் படித்து ரசித்தது:

அம்பி: மிஸ்டர் கங்குலி, அம்பயர் அவுட்னுடாரோ இல்லியோ, அப்புறம் ஏன் சத்தம் போட்டுன்டு இருக்கேள்? இது சட்டப்படி தப்பாக்கும்.
கங்குலி: டேய் குடுமி! நா யாருனு தெரியுமா? பெங்கால் டைகர்(Bengal Tiger). அப்டி தான் கத்துவேன்.
அம்பி: கென்யா, பங்ளாதேஷ் கூட எல்லாம் சென்சுரி அடிக்கறேளே, ஆனா அஸ்த்திரேலியா, பாகிஸ்தான்-னா மட்டும் ஒன் பாத்ரூம் போறேளே, ஏன்?
கங்குலி: நான் தாதா-டா! தேவையானப்ப மட்டும் ஆடுவேன்.
அம்பி: கேப்டன் கங்குலி, மத்த டீம் கேப்டன்லாம் (பான்டிங், ஸ்மித், இன்ஸி) செஞ்சுரி அடிச்சு அவா டீமை ஜெயிக்க வைக்கரா, ஆனா நீங்க மட்டும் ஆடவே மாட்டேன்றேளே?
கங்குலி: டேய் குடுமி! அதான் சச்சின், சேவாக், டிராவிட் எல்லாம் செஞ்சுரி அடிக்கரானுங்கல்ல, அப்புறம் நான் எதுக்குடா அடிக்கனும்?
அம்பி: அலட்சியமா பேசாதேள் கங்குலி. அடுத்தவா டேலண்ட்ல புகழ் தேட்ரது தப்பு!
கங்குலி: போடா குடுமி! எனக்கே அட்வைஸ் பண்றியா? #$^%$##$%(அர்சனை தொடர்கிறது)...


அன்னியன்: டேய் பாடு (BAADU).
கங்குலி: யாருங்க நீங்க? கில்லஸ்பி மாதிரி ஹேர் ஸ்டைல் வச்சிருக்கீங்க??
அன்னியன்: நான் அவன் இல்லடா, எமன். ஏன்டா ரன் அடிக்கவே மாட்டேங்கிர?
கங்குலி: பேட்டிங் பார்ம் அப்பப்ப வந்துட்டு போகும். இதெல்லாம் கிரிக்கெட்ல சகஜம்ங்க.
அன்னியன்: இப்டி சொல்லி தப்பிச்சிகலாம்னு பாக்குரியா!!!!!!

அன்னியன்: 5 ரன் எடுத்தா தப்பா?
கங்குலி: ஒன்னும் தப்பு இல்லீங்க.
அன்னியன்: 5 மேட்ச்சுல 5 ரன் எடுத்தா தப்பா?
கங்குலி: தப்பு மாதிரி தாங்க தெரியுது.
அன்னியன்: 5 வருஷமா 55 மேட்ச்சுல 5 ரன் எடுத்தா தப்பா?
கங்குலி: பெரிய தப்பு தாங்க.
அன்னியன்: கம்மனாட்டி! அதத்தான்டா ஒவ்வொரு மட்ச்சுலயும் நீ பண்னிக்கிடு இருக்கே!
அன்னியன்: இது மாதிரி சொந்த லாபதுக்காக டீமை தோக்கடிக்கரவனுக்கு, நரகத்துல குடுக்கர தண்டனை 'பால்(Ball)பாகம்'.உன்னை ஸ்டெம்ப்பா நிக்க வச்சி, அக்தர், லீ, மெக்ராத் எல்லாரும் பவுலிங் ப்ராக்டீஸ் பன்னபோறாங்க!!!!!!!

நன்றி - ராம்பிரசாத்