November 30, 2005

Firefox-ல் தமிழ்

ரொம்ப நாளாவே Firefox (நெருப்புநரி?) தமிழ் font-ங்கல ஒயுங்கா காட்டாம ஆட்டங்காட்டுச்சுங்க. இம்புட்டு நாளுக்கப்புறம் அத்த சரி ஒருவழியா கட்டிகீராங்க. இத்த செஞ்சா சரியா பூட்துங்க. இப்ப தினமலர், விகடன், குமுதம்... எல்லாம் சோக்கா Firefox-ல தெர்துங்க. உங்களுக்கும் வேணுமுனா இன்ஸ்டால் பண்ணி பாருங்க. தமில வளத்து உடுங்க... வாள்க டமில்...

பி.கு: கடைசியாக கிடைத்த தகவலின்படி இந்த நற்காரியத்தை பயர்பாக்ஸ் தமிழ் உலகிற்கு அளித்தவர் சரவணன். நன்றி சரவணன். உங்கள் தமிழ் பணி தொடர எனது வாழ்த்துக்கள்.

Categories:

November 29, 2005

சின்னத்துரையும் முத்துசாமியும்

மற்றுமொரு தமாசு வீடியோ + கருத்து.
என்சாய்....




Categories: ,

November 18, 2005

சிவாஜி பன்ச் - இது எப்டி இருக்கு?

சிவாஜி படத்தில் இந்த பன்ச் டயலாக்குகள் உள்ளன என எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது (அப்கோர்ஸ் புரளி தான்). தலைவர் சொல்ற மாதிரி கண்ணை மூடி கற்பனை செய்துபார்த்ததில் உடம்பெல்லாம் புல்லரித்து போய்விட்டது. நீங்களும் படித்து புல்லரித்து கிடவாக.

தலைவர்: சிங்கத்தை கொஞ்ச முடியாது, சிவாஜியை மிஞ்ச முடியாது!

தலைவர்: அமைதிக்கு பாபாஜி, அடிதடிக்கு சிவாஜி.

தலைவர்: பாம்பை பார்த்தா படையே நடுங்கும்,
இந்த சிவாஜியை பார்த்தா பாம்பே நடுங்கும்!

தலைவர்: தண்ணீரை கிள்ள முடியுமா?
சிவாஜியை வெல்ல முடியுமா?

தலைவர்: போன் அடிச்சா ரிங்கு, இந்த சிவாஜி அடிச்சா சங்கு!

தலைவர்: கண்ணா...! ஆளு ரவுண்டா இருந்தா பத்தாது.
ஆட்டதுல ஆல்ரவுண்டரா இருக்கனும்...



உங்களுக்கு இது போல இன்னும் எதாவது தோனுச்சினா பின்னூட்டத்தில்(கமென்ட்) இடவும்.




Categories:

November 11, 2005

கில்லி + டைடானிக்



நம்ம மக்கள் யாரோ டைடானிக் படத்தோட வீடியோக்கு கில்லி படத்தோட டையலாக்கை கலந்து ரவுசு காட்டியிருக்காங்க. வீடியோவை பார்த்து வயிறு வலிக்க சிரிச்சேன். அந்த வீடியோவை உங்கள் பார்வைக்காக கீழே இணைச்சிருக்கேன். இதை உருவாக்கியவருக்கு (யாருனு எனக்கு தெரியலை) எனது நன்றி.


Warning: இதை பார்த்து, அதனால் உங்கள் வயிறு புண்ணானால் அதற்கு நான் பொறுப்பல்ல.


















Launch in external player


*இந்த வீடியோவை அனுப்பிய பாலஜிக்கு நன்றி



Categories: , ,

November 10, 2005

கருத்து கருத்துப்போச்சு

பத்திரிக்கையின் கருத்துக்கணிப்புக்கு கருத்து தெரிவித்த குஷ்புவின் கருத்துக்கு அதரவை தனது கருத்தின் மூலம் தெரிவித்த சுஹாசினியின் கருத்தைப் பற்றி எனது கருத்தை உங்கள் மீது நான் திணிக்க,
நீங்கள் உங்கள் அதரவு/எதிர்ப்பை கருத்தாய் தெரிவிக்க,
தமிழ் பாதுகாப்பு (ஆப்பு என படிக்கவும்) இயக்கம் களத்தில் குதிக்க,
எதிர்ப்பு போஸ்டர் அடிக்க,
இந்த கூத்தை பார்த்து ஊரே சிரியாய் சிரிக்க,
இதனால் பைத்தியமாகி பலர் சுவரைப் பார்த்து வெறிக்க,
க்க க்க க்க...

வேணாமடா சாமி இந்த பொழைப்பு. ஏற்கனவே நான் கண்ட திகில் கனவு ஒன்று போதும்.
அடங்கொக்கமக்கா! கடைசியில 'கருத்து' என்ற சொல்லே கருத்துப் போச்சே.

Categories: ,

November 07, 2005

அய்யா எஸ்.ஜே. சூர்யா

சற்று நேரம் முன் "Before Sunrise" என்ற ஆங்கில படத்தை பார்த்தேன். படம் முழுதும் இரண்டே கதாபாத்திரங்கள் - நாயகன் & நாயகி (வேர யாருப்பா??). ரயிலில் ஆரம்பித்து ரயிலில் முடிகிறது கதை. ஒரு பிரெஞ்சுகாரியும் ஒரு அமேரிக்கனும் புடாபெஸ்ட், வியென்னாவில் ரயிலில் சந்தித்துக் கொள்கிறார்கள். ஒரே ஒரு நாள் ஒன்றாக சுற்றித் திரிகிறார்கள். இது தாங்க கதை. என்னடா இவன் எஸ்.ஜே. சூர்யா மாதிரி கதை சொல்றான்னு பாக்கறீங்களா? அட அதுக்காக இந்த தலைப்பை வைக்கலை. நம்ம 'வாலி' படத்துல சோதிகா (ஜோதிகா) பொண்னு போன்ல பேசறாப்புல அஜீத்து கிட்ட லவ்வ சொல்லுமில்ல, அது இந்த படத்துல இருந்து சுட்டத்துங்க. அந்த(வாலி) படத்துல நல்லா இருந்த ஒரே சீன் இதுதான். அப்பவே நெனச்சேன் இது எங்கியோ சுட்டதுனு. இப்பதான் குட்டு வெளிபட்டு இருக்கு.

சான்சு கிடைச்சா இந்த படத்தை பார்த்துடுங்க. ரெண்டே பேருதான் படம் முழுக்க வந்தாலும் படம் போர் அடிக்காம போகும். படத்துல பல சித்தாந்தங்களை அளசுராங்க. சாம்பிளுக்கு ஒன்னு இதோ - "இறைவன் என்பவன் உனக்குள்ளோ, என்க்குள்ளோ இல்லை; உனக்கும் எனக்கும் உள்ள இடைவெளியில் தான் இருக்கிறான்..."

Categories: ,

November 02, 2005

தீபாவளி ஸ்பெஷல் -- கூத்து

ஊருலருந்து இமாந் தூரம் தள்ளி குந்திகினுகீரதால, நமக்கு டப்பாசு-less தீபாவளி தான். அதனால factory outlet-லருந்து சீப்பா புட்ச்சாந்த சொக்காய போட்டுகினு பிளாஸ்டிக் கவரை ஊதி "டபால்"னு தட்டி வெடிச்சுபுட்டு relianceindiacall வச்சி ஊட்டாண்ட கால் பண்ணா ஒன்னிமே கேக்கலை, ஒரே டப்பாசு வெடிக்கற சத்தம். ஒரு மாறி பேசி முட்சிபுட்டு, அட்த தெருவாண்ட கீற தேசி ஓட்டலுக்குள்ள பூந்து ஒரு வெட்டு வெட்டிபுட்டு வூட்டுக்கு வந்து கட்டில்ல சாஞ்சேன். அம்புட்டுத்தேன் நம்ம தீபாவளி. போன வருஷம், அலபாமா தமிழ் சங்கத்தோட தீபாவளி விழாவுக்கு போயி ஏஞ்சோட்டு பயலுவளோட சேந்து கட்டுண "F1-கலாட்டா"-ன்ற கூத்து (அத்தாங்க நாடகம்) தேன் மனசுல வந்து நின்னுச்சு. சரினு கொஞ்ச நேரம் அத்தோட ரிக்கார்டிங்கை போட்டு பார்த்தேன்.

நம்ம தமிழ் மன்மதக்குஞ்சு பசங்க யு.எஸ்-கு படிக்க வந்து என்னா என்னா ரவுசு உடுறாங்கன்ற்தை ஒரு நாடகமா போட்டோம். செம ஹிட் ஆயிடுச்சி. சரி நாம மேடையேத்துன கண்றாவிய நம்ம தமிழ் வலை மக்களும் கண்டு கஷ்ட படட்டுமேனு அத்த கூகில் வீடியோஸ்ல அப்லோட் பண்ணிகீறேன். எல்லோரும் கண்டு குஜாலாகுங்கப்பா(???)... கடி தாங்கலைனா அதை பின்னூட்டத்தில் வெடியா போட்டு தாக்குங்கப்பா.

இனிய தீபாவளி நல்வாழ்துக்கள்.