சிறு வயது நண்பரான சுப்பிரமணியின் "நல்லதோர் வீணை" என்ற கவிதையை எழுதி எனது வலைபதிவை துவக்குகிறேன்...
நல்லதோர் வீணை செய்தே -அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி, -எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்து விட்டாய்,
வல்லமை தாராயோ, -இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கோ?
சொல்லடி, சிவசக்தி! -நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?
விசையுறு பந்தினை போல் -உள்ளம்
வேண்டிய படிசெல்லும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன் -நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினை தீசுடினும் -சிவ
சக்தியை பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன்; இவை
அருள்வதில் உனக்கேதுந் தடையுளதோ?
Breaking the slumber, thanks 2020!
-
I know that this place has been decaying over the past decade. But then
2020 has been that kind of year, that I was forced to register its
existence at ...
3 years ago