வரப்போற சட்டமன்ற தேர்தலுக்கு இப்பவே கருத்து கணிப்புகள் சூடு சேர்க்க ஆரம்பிச்சுடாங்க. நம்ம வலைபதிவு மக்களும் காரசாரமா போட்டு தாக்கிட்டு இருக்காங்க. "அடடா! நாம இங்க(அமெரிக்கா) உக்கந்துக்கிட்டு என்னத்த பண்ண" அப்பிடீனு நானும் என்னோட மனசாட்சிகளும் பேசிக்கிட்டு இருந்தோம்
நான்: அரசியலுக்கும் நமக்கும் என்னா சம்மந்தம்?
ம1(மனசாட்சி1): அப்படிலாம் சொல்லக் கூடாது. கலாம் அங்கிளே "இளைஞர்கள் நாட்டின் தூண்கள்"-னு சொல்றாரு. பொருப்பா நடந்துகற வழிய பாரு.
நான்: யேய் யாருப்பா அது?
ம1: நாந்தேன், உன்னோட மனசாட்சி.
நான்: அண்ணா வணக்கண்ணா! இப்ப என்ன பண்ணசொல்றீங்க?
ம1: அதாவது, ...
அதற்குள் இடைமறித்து,
ம2(மனசாட்சி2): அது பேச்ச கேக்காதே, நான் சொல்றத கேளு!
நான்: அட! இது யாருப்பா?
ம2: நானும் உன்னோட மனசாட்சிதேன்.
ம1: ஆஹா வந்துட்டான்யா வந்துட்டான்.
நான்: நான் இங்கருந்துகிட்டு என்னாத்த பண்ண முடியும்?
ம1: தபால்ல ஓட்டு போடலாம். ஒவ்வொரு இ.குடிமகனும் கட்டாயம் ஓட்டு போடனும்-னு கலாம் அங்கிளே சொல்லியிருக்கார்.
நான்: எனக்குத்தான் வாக்காளர் அட்டையே இல்லியே, நான் எப்பிடி ஓட்டு போட முடியும்?
ம2: அரசியல் ஒரு சாக்கடை. விடுபுட்டு ஜோலிய பாக்க போ!
ம1: 24 வயசாயிருக்கு. 6 வருஷமா அட்டைய வாங்காம என்னாத்த புடுங்கீட்டு இருந்த?
நான்: ஒவ்வொரு தடவையும் நானும் பேரை குடுப்பேன். போட்டோ எடுக்க பொறப்ப எம்பேரு லிஸ்டுல இல்லைனு சொல்றாங்க. நான் என்னா பண்றது?
ம2: அப்பவே சொன்னேன் அரசியல் ஒரு சாக்கடைனு!!!
நான்: அப்புறம் அமெரிக்கா வந்துட்டேன். இனிமே எதாவது பண்ண முடியுமா?
ம1 & ம2: அட முட்டாப் பயலே உன் வோட்ட வேற எவனோ போட்டுகிட்டு இருக்கான். நீ இங்க உக்காந்து தலைய சொறியுற. இதுக்கு மேல ஒரு மண்ணும் பண்ண முடியாது. முடிஞ்சா புஷ்ஷுக்கு கள்ளவோட்டு போட பாரு.
நான்: ஹலோ! நில்லுங்கப்பா. எனக்கு ஒரு பதில் சொல்லிட்டு போங்க. அதுக்குள்ள ஓடுனா எப்பிடி?
"ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை" என பின்னிசை கேட்கிறது....
வலைபதிவு மக்களே, என் போன்ற மக்கள் ஜனநாயக உரிமையை நிலைநாட்ட வாய்ப்பு இருக்கா? உங்களுக்கு எதாவது யோசனை இருந்தா சொல்லுங்கப்பா.
Categories: கேள்வி
8 comments:
ஆள்தோட்டம்,
நம்ம கேஸூதானா? நானும் ஆறு வருஷமா முயற்சி பண்றேன். நமக்கு இந்த பாழாப்போன வாக்காளர் அட்டை கொடுக்க மாட்டேங்கறாங்க. மானசீகமாத்தான் ஓட்டு போட்டுகிட்டிருக்கேன்.
எஸ்.கே ஒரு லின்க் கொடுத்திருந்தார்.
இங்க போய் பதிவு பண்ணிக்கலாம்னு சொல்றாங்க. இங்கேயாவது முயற்சி செய்து பார்க்கணும்.
மிக்க நன்றி இராமநாதன். வாக்காளர் புகைப்படத்திற்கு என்ன பண்றது? அங்கே குடுக்கப்பட்டுள்ள HELP link-ல் "NRI's cannot apply" அப்டீனு சொல்றாங்களே? நீங்க முயற்சி பண்ணீங்களா?
வோட்டுப் போட்டா இந்த குடம் டம்பளர் இதெல்லாம் கொடுப்பாங்களே நீங்க எப்படி வாங்குவீங்க?
ஆமா நீங்க 'அவங்களுக்கு' தானே ஓட்டுப் போடப் போறீங்க?:)
DEV, இந்தியன் தாத்தா என்ன சொல்றாருனா "லஞ்சம் குடுக்கரதும் தப்பு, வாங்கரதும் தப்பு". நம்ம வோட்டு செல்லாத வோட்டு சார்.
ஆள்தோட்டம்,
நாமெல்லாம் NRI categoryல வருவோமான்னு எனக்கும் குழப்பம். மூணு வருஷத்துக்கு மேல் இந்தியாவிற்கு வராமல், வெளிநாடுகளிலேயெ தொடர்ச்சியாய் இருந்திருக்க வேண்டும் என்பதுதான் criteria என்று நினைக்கிறேன். அதனால் நாம் இன்னும் very much indians தான். ஆனா, சில பேரு வேணா Not Reqd in indiaனு சொல்லக்கூடும். :))
பின்னூட்ட மட்டுறுத்தல் இல்லாததாலதான் தமிழ்மணத்துல திரட்டப்படலேன்னு நினைக்கிறேன். அத கவனிங்க.
பின்னூட்ட மட்டுறுத்தலை சோதனை செய்ய இந்த பின்னூட்டம்
இராமநாதன்,
அச்சச்சோ நான் இந்தியாவிலிருந்து 2003 ஆகஸ்ட் மாதம் வந்தது தான். இதுவரை தாய் மண்ணை மிதிக்கவில்லை.
பின்னூட்ட மட்டுறுத்தலை செயல்படுத்தி விட்டேன். இதை செய்ய என்னை போன்ற சோம்பேறியை உந்தியதற்கு நன்றி...
மக்கா, நா இருபது வருசமா ஓட்டுப் போடலெ, அது உங்களுக்குப் பெரிசா ட்தெரியலே, மூணு வருசத்தையும், ஆறு வருசத்தையும் சொல்ல வந்துட்டீங்க
எல்லாம் நேரம்லெ.
என்னிக்காவது ஒரு தடவையாவது போட மாட்டோமா.
ஆனா நா ஒருவாட்டி கள்ள ஓட்டு போட்டுட்டேன்லெ அது ஆச்சி ஒரு மாமங்கம்....
Post a Comment