February 12, 2006

ரங் தே பசந்தியும் Jésus de Montréal-உம் - சில உண்மைகள்

ரங் தே பசந்தி(RDB) படத்தை சென்ற வாரம் அருகில் உள்ள ரேவ்(rave) திரையரங்கில் சென்று கண்டேன். நான்கு, ஐந்து, மற்றும் ஆறாம் வகுப்பில் சந்தர்ப்ப சூழ்நிலையால் சென்னையில் ஹிந்தி பாடத்தை மூன்றாம் மொழியாக எடுத்து விழி பிதுங்கியதாலும் (மூன்று வருடமும் அருகில் அமர்ந்த தீபா என்ற தேவதை எழுதுவதை அப்படியே எனது விடைத்தாளில் வரைத்து பாஸானது வேறு கதை), ஏம்.டீவி(Mtv) கிளிகிளுப்பை (சத்தியமா இசையைத்தாம்பா சொல்றேன்) கண்டு பெற்ற ஹிந்தி ஞானத்தை வைத்து கொண்டு ஒப்பேற்றி படத்தை புரிந்து கொள்ளலாம் என சென்றேன்.

அரைகுறை ஹிந்தியில் நானே தனி கதையை நினைக்க வழியில்லாமல் subtitle-ஐ போட்டுவிட்டார்கள். பாலக்கரை பாலன் அவரது பதிவில் இப்படத்தை ஏற்கனவே அக்கு வேறாய் ஆணி வேறாய் ஆராய்ந்து விட்டதால் நேராக அடுத்த விஷயத்திற்கு போகிறேன்.

படத்தைப் பார்த்து விட்டு வீட்டிற்கு வந்ததும் வழக்கம் போல நண்பருடன் அமர்ந்து படத்தின் முடிவு சரியா என அலசினோம். படத்தைப் பற்றி புகழ்ந்து கொண்டிருக்கையில் நண்பர் கூறினார் "ரக்கேஷ் ஒம்பிரகாஷ் மெஹரா (டைரக்டர்) இந்த படத்திற்காக ஏழு வருடமாக ஆராய்ச்சி செய்ததாக rediff-ல் வெளியாகியுள்ளது".

உடனே rediff சென்று பார்த்ததில் டைரக்டரின் பேட்டியில் ஒரு பகுதி என்னை வியப்பில் ஆழ்த்தியது.

கேள்வி: How long did it take to complete Rang De Basanthi
டைரக்டரின் பதில்: 7 years of research-4years of writing-16 months in pre-production-4 months of shooting and 7 months of post production

இதற்கு ஏன் வியப்படைய வேண்டும் என நினைப்பவர்கள் Jésus de Montréal என்ற பிரென்சு மொழி படத்தை பார்த்திருந்தால் காரணத்தை அறிந்திருப்பீர்கள். படத்தின் கரு IMDB-இன் வரிகளில்:
"A group of actors putting on an interpretive Passion Play in Montreal begin to experience a meshing of their characters and their private lives as the production takes form against the growing opposition of the Catholic church."

Jésus de Montréal படத்தை நான் காணவில்லை என்றாலும் கதை சுருக்கட்டிலிருந்தே தெரிகின்றது இது ஒரு அப்பட்டமான தழுவல் என்று. copy இல்லை inspiration என்று கூறினால், பிறகு ஏன் பேட்டியில் தனது சொந்த கற்பனை போல் சித்தரிக்க வேண்டும்? சமீபத்தில் வெளிவந்த படங்களில் RDB-ஐ மிகச்சிறந்த படம் என்று கருதும் எனக்கு இது கொஞ்சம் ஏமாற்றத்தையே தருகிறது. கூடிய விரைவில் Jésus de Montréal படத்தை பார்த்துவிட்டு முழூ ஒப்பீடு செய்து ஒரு பதிவு போடலாம் என்றிருக்கிறேன்.

Categories:

10 comments:

Santhosh said...

என்னையும் ரொம்ப சிந்திக்க வைத்த படம் அது, நீங்க சென்ன பின்னாடி அது தழுவல் அப்படின்னு கேட்பதற்கு கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கு.

Unknown said...

அப்படியா சேதி... நேத்து தான் ரங் தே பசந்தி படத்தை நான் பார்த்தேன். படம் பொழுதுப் போக்காகவும் கொஞ்சம் கருத்துச் சொல்லியாகவும் இருந்தது. நீங்கச் சொல்லுற ஆங்கிலப் படம் பற்றி மேலும் செய்திகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...

வெளிகண்ட நாதர் said...

தழுவதல், சார்ந்து இருத்தல், இதெல்லாம் உண்மையா இருந்தாலும், மையப்பிரச்சனை வெவ்வேறா இருக்கும் பொழுது, அப்படி சொல்லிக்கிறதுல்ல தப்பில்லையே!

dvetrivel said...

சந்தோஷ்,
படம் ஒரு தழுவல் என்பதில் எனக்கு எந்த வருத்தமும் இல்லை. அதை தன் சொந்த சரக்கு போல் விற்பனை செய்ய முயலும் இயக்குனரின் பால் தான் எனது கடுப்பு...

ஜொள்ளுப்பாண்டி said...

ஹலோ ஆள்தோட்!
கும்மியடிக்கிற இடத்தில கொசுவுக்கு என்ன வேலையின்னு பாக்காதீங்க பூபதி ! நெசமாலுமே உங்க ஆதங்கம் புரியுது. மன்னிச்சி விட்டுடுங்க ஒகேவா ?
உங்களையும் சங்கிலில பிணைச்சி உட்டுருக்கேன் மானதைக் காப்பாத்துங்கண்ணாவ் !

arunprasad said...

Ennogo dilip nella research dhan..

Sea Boy said...

Adadada ... Namma aalunga enga poonalum caapi adikaratha uda maataengaraangappa !

nanba ... antha perenchu padatha paathuputu enna nu konjam seekeram than sollaen ...

DigitalEye said...

I saw the movie, I really loved it. But, I don't think it needs 7 years of research to make a movie which has such a sparse historical material. Everything in that movie that had a historic context could be found in a high-school history textbook, so I am sure that the director is cooking up stories neverthless he has made a nice movie and he should heavily thank his lead cast