நடக்கும் (நிற்கும்??) இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியை காண்கையில் பேட்ஸ்மேன்களின் கையில் சிக்கி சின்னாபின்னமாகும் பவுளர்களை கண்டு உண்மையில் பரிதாபமே ஏற்படுகிறது. ஒருதினப் போட்டியில் தான் பார்வையாளர்களை திருப்தி படுத்த பேட்ஸ்மேனுக்கு சாதகமான ஆடுகளம் அமைக்கிறார்கள் என்றால், ஐந்து நாள் போட்டியிலும் இதே நிலையா? போட்டி ஆரம்பிக்கும் முன் தான் என்ன பிலிம் காட்டினார்கள் பா'தானியர். இதோ ஒரு சாம்பிள் : "மூன்று பாஸ்ட் பவுலர்கள். எனவே வேகமான, எழும்பும் (fast, hard and bouncy track) ஆடுகளம் அமைத்து இந்திய பேட்ஸ்மேன்களை நிலைகுளைய செய்வோம்."
அப்பொழுதே கவாஸ்கர் இதெல்லாம் "வெத்துப் பேச்சு, இந்திய துணைக்கண்டத்தில் வேகமான ஆடுகளம் அமைப்பது கடினம்" என்றார். கடைசியில் அவர் கூறியது உண்மையானது. பவுளர்களுக்கு சுத்தமாய் ஒத்துழைக்காத டெட் பிட்ச் (dead pitch) மீது விளையாடுகிறார்கள். இந்திய அணியை பொருத்தவரையில் match defining moments என இரண்டைக் கூரலாம்.
1) முதலாவது: பாகிஸ்தான் ஆறு விக்கெட் இழந்து 668 ரன்கள் குவித்து ஆடிக்கொண்டிருக்கிறது. இந்திய பவுளர்களோ "எப்படா இவனுங்க டிக்ளேர் பண்ணுவானுங்க" என கடமைக்கு பந்து வீசிக்கோண்டு இருக்கிறார்கள். வழக்கம் போல் பாகிஸ்தான் பேட்ஸ்மேன் (நாவேத்) இறங்கி வந்து தூக்கி அடிக்கிறார். பவுண்டரி என அனைவரும் நினைக்க, சடாரென கங்குலி மிட் ஆன்-ல்(midon) லிருந்து பின் நோக்கி சிறிது தூரம் ஒடி, பின்பக்கமாக எம்பி குதித்து ஒருகையில் பந்தை டைவ் அடித்து பிடிக்கிறார்.
2) இரண்டாவது:
ஹிந்து பத்திரிக்கையில் தினகரின் எழுத்துகளில் "The fast and furious Shoaib Akhtar kicked up astonishing bounce from a docile pitch and Rahul Dravid, leaping high, his body behind the line and loosening the grip on the handle, managed to keep the beast of the delivery, that would have consumed most batsmen, down."
இழத்த பார்மை மீட்ட சேவகுக்கு ஒரு சலாம். ஓபனிங் பேட்ஸ்மேனாக இரங்க வீரமாக முடிவெடுத்து அணிக்கு முன்னுதாரனமாக திகழும் கேப்டன் டிராவிடுக்கு ஒரு சலாம்.
Categories: விளையாட்டு