November 18, 2005

சிவாஜி பன்ச் - இது எப்டி இருக்கு?

சிவாஜி படத்தில் இந்த பன்ச் டயலாக்குகள் உள்ளன என எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது (அப்கோர்ஸ் புரளி தான்). தலைவர் சொல்ற மாதிரி கண்ணை மூடி கற்பனை செய்துபார்த்ததில் உடம்பெல்லாம் புல்லரித்து போய்விட்டது. நீங்களும் படித்து புல்லரித்து கிடவாக.

தலைவர்: சிங்கத்தை கொஞ்ச முடியாது, சிவாஜியை மிஞ்ச முடியாது!

தலைவர்: அமைதிக்கு பாபாஜி, அடிதடிக்கு சிவாஜி.

தலைவர்: பாம்பை பார்த்தா படையே நடுங்கும்,
இந்த சிவாஜியை பார்த்தா பாம்பே நடுங்கும்!

தலைவர்: தண்ணீரை கிள்ள முடியுமா?
சிவாஜியை வெல்ல முடியுமா?

தலைவர்: போன் அடிச்சா ரிங்கு, இந்த சிவாஜி அடிச்சா சங்கு!

தலைவர்: கண்ணா...! ஆளு ரவுண்டா இருந்தா பத்தாது.
ஆட்டதுல ஆல்ரவுண்டரா இருக்கனும்...



உங்களுக்கு இது போல இன்னும் எதாவது தோனுச்சினா பின்னூட்டத்தில்(கமென்ட்) இடவும்.




Categories:

8 comments:

Anonymous said...

"நான் கெட்டவனுக்கு கெட்டவன்.
ஹ.. ஹ..நல்லவனுக்கும் கெட்டவன்."

Anonymous said...

நீங்கள்லாம் திருந்தவும் மாட்டீங்க
அடுத்தவன திருந்தவும் விட மாட்டீங்க!

Anonymous said...

thala...
"Feedback" க்கு பின்னூட்டம்னா "input" முன்னூட்டாமா?????

என்ன tamil-லு தலை........

பிகுலு கமல்

Anonymous said...

ஆஹா,
ஜென்ம சாபல்யம்!

---
வெற்றிக்கொடி கட்டு....

Anonymous said...

அருள், தலைவரை வில்லனாக்கீட்டீங்களே? இது உங்களுக்கே நியாயமா?

ஜோ, இது வலைபதிவை திட்டி எழுதி இருக்கீங்களா? இல்ல சங்கர் படம் என்பதால் சமுதாய சிந்தனை வசனமா?

கமல், கலாசீட்டப்பா. ஆனா இது ரஜினிக்கு ஒத்து வராது. விவேக்/வடிவேலுக்கு பொருத்தமா இருக்கும் ;)

ராமனாதன், கடைசி வரியில பாட்டைப் போட்டு டெம்போ செட் பண்ணீடீங்க! நன்றி

Anonymous said...

கண்ணா...!
ஆளு ரவுண்டா இருந்தா பத்தாது.
ஆட்டதுல ஆல்ரவுண்டரா இருக்கனும்...
எங்கூட விளையாட நினைக்காத கிரிக்கெட்டு
ஏன்னா நான் ஒரு ரிடையர்டு ;-))

Anonymous said...

சுத்தி அடிச்சா விஜய்
நூலை கட்டி தாவிஅடிச்சா விஜய்காந்
சும்மா நின்னு அடிச்சா ரஜனி. அதுதான் இந்த சிவாஜி.

(மூண்டும் வெட்டி ஹீரோப்பா)

Anonymous said...

poopathi...
nan sonnathu unnuku...
Ehga thalapathi ikku illa....

Enna puriutha.......

Bigulu Kamal...