November 07, 2005

அய்யா எஸ்.ஜே. சூர்யா

சற்று நேரம் முன் "Before Sunrise" என்ற ஆங்கில படத்தை பார்த்தேன். படம் முழுதும் இரண்டே கதாபாத்திரங்கள் - நாயகன் & நாயகி (வேர யாருப்பா??). ரயிலில் ஆரம்பித்து ரயிலில் முடிகிறது கதை. ஒரு பிரெஞ்சுகாரியும் ஒரு அமேரிக்கனும் புடாபெஸ்ட், வியென்னாவில் ரயிலில் சந்தித்துக் கொள்கிறார்கள். ஒரே ஒரு நாள் ஒன்றாக சுற்றித் திரிகிறார்கள். இது தாங்க கதை. என்னடா இவன் எஸ்.ஜே. சூர்யா மாதிரி கதை சொல்றான்னு பாக்கறீங்களா? அட அதுக்காக இந்த தலைப்பை வைக்கலை. நம்ம 'வாலி' படத்துல சோதிகா (ஜோதிகா) பொண்னு போன்ல பேசறாப்புல அஜீத்து கிட்ட லவ்வ சொல்லுமில்ல, அது இந்த படத்துல இருந்து சுட்டத்துங்க. அந்த(வாலி) படத்துல நல்லா இருந்த ஒரே சீன் இதுதான். அப்பவே நெனச்சேன் இது எங்கியோ சுட்டதுனு. இப்பதான் குட்டு வெளிபட்டு இருக்கு.

சான்சு கிடைச்சா இந்த படத்தை பார்த்துடுங்க. ரெண்டே பேருதான் படம் முழுக்க வந்தாலும் படம் போர் அடிக்காம போகும். படத்துல பல சித்தாந்தங்களை அளசுராங்க. சாம்பிளுக்கு ஒன்னு இதோ - "இறைவன் என்பவன் உனக்குள்ளோ, என்க்குள்ளோ இல்லை; உனக்கும் எனக்கும் உள்ள இடைவெளியில் தான் இருக்கிறான்..."

Categories: ,

10 comments:

Anonymous said...

என்ன பூபதி, உங்களுக்குத் தெரியாதா? இதத்தான் பாரதியாரு "சென்றிடுவீர் எட்டுத்திக்கும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் கலைச்செல்வம்"னு சொல்லீருக்காரே.

Anonymous said...

ஆஹா கிளம்பீட்டாங்கய்யா கிளம்பிட்டாங்கய்யா!!! பாரதியாரை ஏனையையா 'quote' செய்து படுத்துரீர்(பாரதியாரை)!!!

Anonymous said...

"இறைவன் என்பவன் உனக்குள்ளோ, என்க்குள்ளோ இல்லை; உனக்கும் எனக்கும் உள்ள இடைவெளியில் தான் இருக்கிறான்..."
ஓஹோ இப்படியும் ஆரம்பிச்சுட்டாங்களா.....

Anonymous said...

Ada! I was pretty impressed with Surya for that particular scene. Hm... disappointing. Well spotted!

Anonymous said...

நன்றி நிலா! கணேஷ் அவர்களே அந்த கருத்து அத்தோடு முடியவில்லை. "இருக்கிறான்..." என்றால் தொடருகிறது என்று அர்த்தம். அதனால் எந்த ஒரு முடிவுக்கும் வரவேண்டாம்.

Anonymous said...

vera nan enna solla..thalai youda kandupudipukku oru bigulu.


Bigulu Kamal

Anonymous said...

//"இருக்கிறான்..." என்றால் தொடருகிறது என்று அர்த்தம். அதனால் எந்த ஒரு முடிவுக்கும் வரவேண்டாம்//
ஏற்கனவே நிறைய பேர் ரொம்ப குழப்பத்தில இருக்காங்க இதில நீங்க வேற குழப்பினா எப்படி?

Anonymous said...

கணேஷ்... மன்னிக்கவும்.
உருமினாத்தான் சிங்கம்,
கருகினாத்தான் தோசை,
உருகினாத்தான் மெழுகு,
குழப்புனாத்தான் நான் பூபதி....ஹி..ஹீ...

பிகில் கமலுக்கு ஒரு பிகில். நன்றி!!!

Anonymous said...

super

Anonymous said...

I have seen this movie in the neighbourhood video shops....will check it out soon.