September 27, 2005

இருக்குது...இல்லை...இருக்குது

நண்பர் ஒருவர் அ(ன்பே)(ருயிரே) [B.F.] சூர்யா போல் "இருந்தது, ஆனா இப்ப இல்லை" என்று பாவமாக புலம்பிக்கொண்டு இருந்தார். "இவன் எப்பவும் இப்படி தான் புலம்புவான்" என்று விட்டுத்தல்லவும் முடியவில்லை. ஏன்னா, பார்ட்டி நாம காது கொடுத்து கேட்கிற வரை அழுது புலம்புவதை நிறுத்தாது. எனவே, "என்னப்பா விஷயம்?" என்று கேட்டேன். பார்ட்டி, இரவு தூங்கும் முன் ஒரு வலைபதிவை (blog) தொகுத்திருக்கிறார் (compose). ஆனால் அதை upload செய்யும் முன் கட்டையை சாய்த்திருக்கிறார் (அட முட்டாப்பயலே!).

விடிந்து எழுந்தவுடன் upload button-னை click செய்தால், இரவு எழுதிய அனைத்தும் தொலைந்து பொயிருக்கிறது. என்ன செய்தும் மீட்க முடியவில்லை. தனது பொன்னான சிந்தனை (???) தொலைந்த துக்கத்தில் Blogger-ஐ திட்டித் தீர்த்தார். "அட விட்டுத்தள்ளுப்பா!" என்று கூறியும் விடாமல் ஏதோ blogger Premium account வாங்கியவர் போல் விடாமல் கூச்சல் போட்டு ஒருவழியாக ஒய்ந்தார்.

இதற்கு விடை தான் என்ன என்று வலையில் துழாவியபோது இரண்டு விஷயங்கள் தெரிந்தது.

1) MS word-ல் பதிவை டைப் செய்து விட்டு, blogger-ல் upload செய்ய blogger for word என்ற tool உள்ளது என்பது ஒன்று.

2) சமீபத்தில், blog edit window-ல் "recover post" என்ற விஷயம் சேர்க்கப் பட்டுள்ளது.


இதையும் தாண்டி ஒருவரது வலைபதிவு தொல்லைந்து போனால் " கடவுள், நேயர்களை காத்துவிட்டார்" என்று தான் நினைத்துக் கொள்ள வேண்டியது தான்.

5 comments:

Anonymous said...

//இதையும் தாண்டி ஒருவரது வலைபதிவு தொல்லைந்து போனால் " கடவுள், நேயர்களை காத்துவிட்டார்" என்று நினைத்துக் கொள்ள வேண்டியது தான்.//


ha ha ha :)

Anonymous said...

ambi ... oru postukkaaga ennai bali aakkinadhu ,,, anyaayam ,,, aanalum sammadham :)

btw, pudhu template ... asathala irukku!
kalaasunga.

Anonymous said...

நன்றி: அவதாரம்!

ராம்: கதையை மட்டும் பார்க்காதே! கதை சொல்ல வந்த கருத்தை பார்.

Anonymous said...

good piece of information machi

Anonymous said...

kalakkurae dilippuuu...