குலதெய்வத்துக்கு வெட்டும் கிடா பற்றிய பதிவு என நினைத்துக் கொண்டு இங்கு வந்தவர்கள் மன்னிக்கவும் இது கிரிக்கெட்டுக்கான பதிவு. பல தளங்களில் கங்குலியை தூக்கியது சரியா தவறா என விவாதங்கள் சூடு பறக்கிறது. சிலர் சரியே என்கிறார்கள் சிலர் தவறு என்கிறார்கள். என் வோட்டு யாருக்கு என்பதை விட தற்பொழுது நடைபெரும் குழப்பமே தேவையற்றது என்பது என் எண்ணம்.
சுழற்சிமுறை (Rotation Policy) கையாண்டிருந்தால் இந்த குழப்பத்திற்கு இடமே இல்லாமல் போயிருக்கும். சச்சின், கங்குலி, யுவராஜ் மற்றும் லட்சுமன் ஆகிய நால்வரில் ஒருவர் ஒவ்வொரு ஆட்டதிலும் இளைப்பாரலாம். இதன் மூலம் இவர்கள் காயம் அடைவதில் இருந்தும் காப்பாற்றப்படலாம். இதுகுறித்து உங்கள் (மாற்று)கருத்து ஏதேனும் இருப்பின் அதை பின்னூட்டமாக இடவும்.
Categories: விளையாட்டு
4 comments:
மிகவும் சரி, இப்படி செய்தால் நமது talent pool'in வளர்ச்சிக்கும் நல்லது. கார்ட்டூன் பலே! பலே! மிகவும் அற்புதம்.
கிடா வெட்டலாம்
ஏமாற்லாமா?
யோவ் என்னய்யா கங்குலி உங்களுக்கு கிடாவாத் தெரியுறாரா? அகில உலக கைப்புள்ள கங்குலி ரசிகர் மன்றம் உம்மை என்னப் பண்ணப் போகுதோ?
பாலாஜி,
நன்றி
ennar,
கிடா வெட்டும் போதே அது தலையில தண்ணிய ஊத்தி அது தலைய ஆட்டுச்சுனா "உத்தரவு குடுத்துடுச்சி"னு ஏமாத்தராங்க தானே?
Dev,
ண்ணா! நான் உங்க சைடுங்கண்ணா!
Post a Comment